சூழலைச் சுத்தப்படுத்தும் செயற்றிட்டத்திட்டத்திற்கு; பட்டிருப்பில் பேரணி



மேன்மை தங்கிய ஜனாதிபதியின் கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தினை முன்னிட்டு நடாத்தப்படவிருக்கும் சூழலைச் சுத்தப்படுத்தும் செயற்றிட்டத்தினை நடைமுறைபடுத்துமுகமாக பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் இன்று காலை எழுர்ச்சி ஊர்வலப் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் தலைமையில் நடைபெற்ற இச் எழுர்ச்சி ஊர்வலப் பேரணியில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் நிருவாக உத்தியோகஸ்த்தர், கணக்காளர், பொறியியலாளர்,அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் அனைவரும் இணைந்து எழுர்ச்சி ஊர்வலப் பேரணியில் பங்கெடுத்தனர்.

இன்றைய எழுர்ச்சி ஊர்வலப் பேரணியில் போதை மற்றும் மதுப்பாவனையை முற்றாக ஒழிப்போம்  எமது சிறார்களை அழிவில் இருந்து மீட்போம், சுத்தமான காற்றைச் சுவாசித்தல், நுளம்பு வாழ இடம் கொடுத்தால் உன் வாழ்வையே பறி கொடுப்பாய், காட்டை அழிப்பவன் நாட்டை அழிப்பவன், புகை சூழலின் பகை, எனும் வாசகத்தைத் தாங்கியதாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.