தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவை இன்று விளக்கமறியலில் வைத்த போது, நீதிமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக கூறப்படும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விமல் உள்ளிட்ட இருவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, சுதேஷ் பிரேமலால் பொன்சேகா என்பவர் நீதவானை நோக்கி கைகளை நீட்டியபடி கூச்சலிட்டு குழப்பநிலையை தோற்றுவித்ததன் அடிப்படையில் நீதவானின் உத்தரவுக்கு அமைய கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.