தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கின் மேன்முறையீட்டை மீண்டும் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் குறித்த மேன்முறையீட்டை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீடு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது.
குறித்த மேன்முறையீட்டை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட வேளை மனுதாரர் தரப்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகாமையே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
எனினும் அந்த மனுவை மீள பரிசீலிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.
இதனை ஏற்றுக் கொண்ட திபாலி விஜேசுந்தர மற்றும் லலித் ஜெயசூரிய ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்கள் குழாம், சம்பந்தப்பட்ட மேன்முறையீட்டை மீண்டும், எதிர்வரும் மார்ச் 3ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது.