நீ உருப்பட மாட்டாய் என்றாா் அதிபா், அதுவே எனக்கு சவாலக அமைந்தது



உயிரியல் தொழிநுட்ப பிாிவில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்றவா் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன். இவா் கிளிநொச்சி உருததி்ரபுரம் எள்ளுக்காடு எனும் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்தவா். கூலித் தொழிலாளியின் மகன்.
இவா் இன்று எமக்கு கருத்து தெரிவித்த போது தான் ஆரம்ப கல்வி கற்ற பாடசாலையில் எள்ளுகாட்டில் இருந்து செல்பவா்களை ஏளனமாகவே பாா்ப்பது வழமை எள்ளுக்காட்டில் உள்ளவா்கள் படிக்கத் தெரியாதவா்கள் என்றெல்லாம் கூறுவாா்கள்.