காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரில் 3 தினங்களாக கவனிப்பாரற்ற நிலையில் வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்று பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த கார் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று (வெள்ளிக்கிழமை) காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காத்தான்குடி 2 கபுறடி பிரதான வீதியில் இருந்து சுமார் 20 மீற்றர் தூரத்தில் இந்தக் கார் கடந்த 3 நாட்களாக யாரும் உரிமை கோராத நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.
இதனை அவதானித்த அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உடனடியாக ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் காரை மீட்டதோடு மோட்டார் போக்கு வரத்துத் திணைக்களத்தின் ஒன்லைன் இல் கார் உரித்துப் பற்றி பரிசோதித்த போது அந்த கார் ஓட்டமாவடியைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, வாழைச்சேனைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

