மட்டக்களப்பு நகரில் நீண்டகாலமாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய நிலையில் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேகநபர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 09 துவிச்சக்கரவண்டிகளும் நான்கு கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சந்தேகநபர் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 09 ஆம் திகதி வரை குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

