வெலெ சுதாவின் சகோதரனும் கைது



மரண தண்டனை கைதி வெலெ சுதா என அழைக்கப்படும் சமன்த குமாரவின் தாய் மற்றும் சகோதரர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 20கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
கலால் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வெள்ளவத்தையில் வைத்து அவர்கள் கைதாகியுள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபர்களை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.