ஏறாவூரில் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கும் போதை ஒழிப்புப் பேரணி




ஏ.எச்.ஏ. ஹுஸைன் 


ஏறாவூரில் புதன்கிழமை (01.02.2017) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படும் போதை ஒழிப்புப் பேரணியில் 3 ஆயிரம் இளைஞர்கள் உட்பட சமூகசேவைச் செயற்பாட்டாளர்கள் மொத்தமாக 10 ஆயிரம் பேர் பங்கேற்பர் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலகம் அறிவித்துள்ளது.



இது தொடர்பாக முதலமைச்சர் செயலகம் செவ்வாய்க்கிழமை (31.01.2017) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு என்ற ஜனாதிபதியின் தூரநோக்கு இலக்கின் அடிப்படையிலும் கிழக்கு மாகாண சபையின் செயற்திட்டத்தின் அடிப்படையிலும் 'போதையற்ற கிழக்கு' எனும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.







மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவிவுகளில் செயற்படும் இளைஞர் அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் ஆகியவற்றிலிருந்து போதையொழிப்பில் ஆர்வமுள்ள 3 ஆயிரம் இளைஞர்கள் பங்குபற்றுகின்றார்கள்.
மேலும்ளூ போதையொழிப்பில் ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்களுமாக மொத்தம் 10 ஆயிரம் 'போதையற்ற கிழக்கு' வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்கின்றார்கள்.