செ.துஜியந்தன்
பாண்டிருப்பில் 27 வயது யுவதியொருவர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் பெற்றோர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து காணாமல் போயுள்ள யுவதியை தேடும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றன.தற்போது இவ் யுவதி உயிரோடுஇருக்கிறாரா? இல்லையா? எங்கே இருக்கிறார்? என்பது தொடர்பில் பெற்றோரும்,உறவினர்களும் அங்கலாய்து வருகின்றனர்.
தமது மகள் தற்கொலை செய்திருக்கமாட்டாள் எனவும், அவர் பற்றிய தகவல் தெரிந்தால் அறியத்தருமாறும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
பாண்டிருப்பு சர்மிலன் வீதியில் வசிக்கும் பத்மநாதன் பிரமினா(27வயது)
என்பவரே காணமல் போயுள்ளார். கடந்தவெள்ளிக்கிழமை கடிதம் ஒன்றை
எழுதி வைத்து விட்டு அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு
வெளியேறிச் சென்றுள்ளார். என்னை எவரும் தேட வேண்டாம். என்
சாவிற்கு எவரும் காரணமல்ல. குடும்பத்திலுள்ள அனைவரையும்
கவனமாகப் பாருங்கள். என் சடலம் கிடைத்தால் அம்மம்மாவை புதைத்த
இடத்திற்கு அருகில் புதைத்து விடுங்கள் எனத் தெரிவித்து நீண்டதொரு கடிதம் எழுதிவைத்து விட்டே குறித்த யுவதி வெள்ளிக்கிழமை அதிகாலை வேளை 2 மணிக்கு வீட்டைவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கும் முறைப்பாடு
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டிருப்புக் கடற்கரையில் யுவதி
அணிந்து சென்ற பாதணிகள் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப் பெண் கடலில் வீழ்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இது தொடர்பில் கடற்படையினருக்கும்
அறிவிக்கப்பட்டுள்ளதுடன் காணாமல் போன யுவதியை தேடும் முயற்சிகள்
முடுக்கி விடப்பட்டுள்ளது.

