எல்லை நிர்ணய குழு அறிக்கையை ஏற்க மறுத்தார்



எல்லை நிர்ணய குழு தயாரித்துள்ள அறிக்கையை அதன் தலைவர் அசோக பீரிஸ் இன்று உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளித்த நிலையில் குழுவின் இரண்டு உறுப்பினர்கள் அந்த அறிக்கையில் கையெழுத்திடவில்லை என்ற காரணத்தினால், அமைச்சர் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நியமிக்கப்பட்ட சாலிய மெத்தியூ, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி எஸ்.மிஸ்பா ஆகியோரே அறிக்கை யில் கையெழுத்திடவில்லை.
குழுவின் தலைவர் அசோக பீரிஸ், மக்கள் விடுதலை முன்னணி நியமித்த சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமித்த பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை உட்பட ஏனைய உறுப்பினர்கள் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் அரசாங்கம் எல்லை நிர்ணய அறிக்கையை காரணம் காட்டி உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தி வரும் நிலை யில், அமைச்சர் உறுப்பினர்கள் கையெழுத்திடவில்லை எனக் கூறி அறிக்கையை நிராகரித்து ள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கமைய ஜனவரி 09 ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, அரசா ங்கத் தரப்புத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
முன்னதாக எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கையை, உள்ளூராட்சி மன்ற ங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நிராகரித்துள்ள நிலையிலேயே, இவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.