இலங்கைக்கு எதிரான போட்டியில் ஹஷிம் அம்லா சாதனை பட்டியலில்



100 டெஸ்ட் போட்டிகளில் பங்குப்பற்றிய 8ஆவது தென் ஆபிரிக்க வீரர் என்ற பட்டியலில் ஹஷிம் அம்லா இன்று இணைந்துக் கொண்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்குப்பற்றியதை அடுத்தே அவர் இந்த பட்டியலில் இணைந்துக் கொண்டுள்ளார்.
7665 ஓட்டங்களை டெஸ்ட் போட்டிகளில் ஹஷிம் அம்லா பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த காலப் பகுதியில் 25 சதங்களையும், 31 அரை சதங்களையும் அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஜெக் கலிஸ், மாக் பவுச்சர், கிரேக் சுமித், ஜோன் பொலொக், ஏ.பீ.டி.விலியஸ், கெரி கர்ஸ்டன் மற்றும் மகாயா நிட்னி ஆகியோர் இதற்கு முன்னர் இந்த பட்டியலில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.