(க.கிஷாந்தன்)
குருவிகளுக்கு கூட தனி கூடுகள் இருக்கின்றது. ஆனால் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு தனி வீடுகள் இல்லையே என ஆதங்கம் கொண்டவர் அமரர்.பெ.சந்திரசேகரன். மலையக மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க பாடுபட்டவரை இழந்தமை ஒரு ஏமாற்றம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னால் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 7ஆவது சிரார்த்த தினம், 01.01.2017 அன்று காலை 12 மணிக்கு, தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கில் யுத்த காலப்பகுதியில் யுத்தத்திற்கு முடிவு கட்டும் முகமாகவும், சரியான தீர்வை எட்டிக்கொடுக்கும் வகையிலும் அரச பிரதிநிதியாக அன்று அமைச்சராக இருந்த சந்திரசேகரன் பல பேச்சுவார்த்தைகளையும் வெளிநாடுகளுக்கு சென்று செயல்பட்டார்.
அன்று அவருடைய சிந்தனை மதிக்கப்படாது. அரசாங்க தரப்பில் சிலர் ஒதுக்கினர். இவரின் அறிவுரையை கேட்டிறிந்தால் நாடு சீரும் சிறப்பாகவும் இருந்தருக்கும். என தெரிவித்த அமைச்சர் 2004ம் ஆண்டு சந்திரிக்கா அம்மையாரின் தலைமையில் அரசு உருவாகிய பொழுது அதற்கு ஆதரவு அளித்த அமரர்.சந்திரசேகரன் தோட்ட தொழிலாளர்களுக்கு தனி வீடுகளை அமைத்துக் கொள்ள 7 பேர்ச் காணியும் தனி வீடும் வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்தார்.
அதேபோன்று அவரின் கொள்கைக்கு ஏற்ப நாமும் நல்லாட்சியில் இதனையே கோரிக்கையாக முன்வைத்தோம். இன்று அவரின் அன்றைய சிந்தனை இன்று நனவாகி வருகின்றது. சமுக மாற்றத்திற்கு கல்வியே முக்கியம் என இவர் வழியுறுத்துவார். அதேபோன்று இன்று பல பாடசாலைகள் தோட்டப்பகுதிகளிலும் நகர் பகுதிகளிலும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
இதற்கென நல்லாட்சி அரசாங்கம் பாரிய நிதிகளை வழங்குவதுடன் நான் அமைச்சராக இருந்து செயல்படுத்தி வருகின்றேன்.
இதுவும் கல்விக்காக அவர் கண்ட கனவாகும். இதனடிப்படையில் பாரியளவில் மலையக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எமக்கு கிட்டியுள்ளது. அன்றாட பிரச்சினைகள் அனைத்தும் தொழிற்சங்கங்கள் ஊடாகவே தீர்க்கப்படும் சூழ்நிலை பழக்கப்பட்டு வந்த நிலையில் தொழிற்சங்கம் அவசியம் என்பதையும் இவர் உணர்ந்து மலையக மக்கள் தொழிலாளர் முன்னணி என்ற பெயரில் தொழிற்சங்கமும் உருவாக்கினர் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன் கவனத்திற்கு தெரிவிப்பதாகவும் இதன்போது மேலும் தெரிவித்தார்.

