(எம்.ஐ.அப்துல் நஸார்)
ஒன்றரை வருடங்களின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவருக்கு உத்தியோகபூர்வ இல்லம்வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ரத்னசிரி விக்ரமநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்குவதற்கு அரசாங்க நிருவாக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி மைத்தரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் தலையீட்டினை அடுத்தே அரசாங்க நிருவாக அமைச்சினால் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு குறித்த உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம், அவர் பாராளுமன்ற எதிர்க்கட்;சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் எதிர்க்கட்சித் தலைவருக்கு இது வரை உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை என பல்வேறு ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

