உதயங்க வீரதுங்கவின் கணக்குகள் இடைநிறுத்தம்



ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு சொந்தமான, 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வங்கிக் கணக்குகளை இடைநிறுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையின் முன்னணி தனியார் வங்கிகளில் 16 கணக்குகளில் இந்தப் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
குறித்த வங்கிக் கணக்குகளை ஆராய்ந்த பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, நகர்த்தல் பத்திரத்தினூடாக இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்தது.
இலங்கை விமானப் படைக்கான மிக் ரக விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு, உதயங்க வீரதுங்க தலையீடு செய்துள்ளமை தொடர்பில் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.