பிலிப்பைன்ஸ் சிறையைத் தாக்கிய இஸ்லாமியப் போராளிகள்



பிலிப்பைன்ஸின் கிடாபவான் நகரிலுள்ள சிறையிலிருந்து நூற்றுக்கும் அதிகமான கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
வடக்கு கொட்டோபாட்டோ பகுதியில் உள்ள குறித்த சிறையை, இஸ்லாமியப் போராளிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தாக்கியுள்ளனர்.
இதன்போது கைதி ஒருவர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் அதிகமான கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற கைதிகளை பிலிப்பைன்ஸ் நாட்டின் படையினரும், பொலிஸாரும் தேடி வருகின்றனர்.
பிலிப்பைன்ஸின் மின்டனாவ் தீவில் உள்ள கிடாபவான் நகரில் இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்கள் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.