2016 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாக உள்ளதென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
55 நகரங்களிலுள்ள 87 பாடசாலைகளில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதாக மேலதிக பரீட்சைகள் ஆணையாளர் ஏ.எஸ். மொஹமட் குறிப்பிட்டார்.
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக சுமார் 35,000 பேரை ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகளில் 68 பாடசாலைகள் முற்றாக மூடப்படவுள்ளதாகவும் மேலதிக பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
பகுதியளவில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள 19 பாடசாலைகளை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை பயன்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

