எளிமையின் சிகரமானார் மீண்டும் ஜனாதிபதி மைத்திரி



கொழும்பின் முன்னாள் நகர் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டமையின் காரணமாக குறித்த ஹோட்டலில் விருந்தொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதி குறித்த விருந்தில் கலந்துக் கொண்டு முஸம்மிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு மிகவும் எளிமையான சாதாரண உடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைத்தந்திருந்த சம்பவம் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையானவர் என பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
அவரின் எளிமையான குணம் சர்வதேச இராஜதந்திரிகள் மட்டத்தில் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விருந்து நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.