வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இராணுவத்தினர் மற்றும் அரச சேவையாளர்களின் உதவியோடு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கை விமானப் படையின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த புதிய குழுவினரின் பயிற்சி நிறைவை அடுத்து நடத்தப்பட்ட பிரியாவிடையில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அதிகூடிய நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பாரிய சவாலாக வறட்சி காணப்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
எனவே, மக்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் முப்படையினரின் உதவியுடன் வழங்குவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்

