(க.கிஷாந்தன்)
கொட்டகலை - ஸ்டோனிகளிப் தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் 100ற்கும் மேற்பட்டோர் அத்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பணிபகிஷ்கரிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் 22.01.2017 அன்று காலை ஈடுப்பட்டனர்.
ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டமானது அத்தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகி வரும் தொழிலாளர்கள் நலத்தில் தோட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன் ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.
அதேபோன்று 21.01.2017 அன்றும் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் மேலும் குறிப்பிடதக்கது.
இந்தநிலையில் இத்தோட்டப்பகுதியில் குளவி கொட்டுகளுக்கு இழக்காகி வரும் தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் தோட்ட நிர்வாகம் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுத்ததாக தெரியவில்லை.
அதேவேளை தேயிலை மலைகளில் காணப்படும் குளவி கூடுகளை அகற்றுவதற்கு இத்தோட்ட மக்கள் பலமுறை தோட்ட நிர்வாக அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆவேசம் கொண்ட தொழிலாளர்கள் 22.01.2017 அன்று காலை தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன் தொழில் பகிஷ்கரிப்பிலும் ஈடுப்பட்டுள்ளனர்.
உடனடியாக தோட்ட தேயிலை மலைகளில் உள்ள குளவி கூடுகளை அகற்றுவதற்கு தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரியும் இத்தோட்டத்தில் குளவி கொட்டு மற்றும் ஏனைய அனர்த்தங்கள் இடம்பெறும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சைகளை மேற்கொள்ள அம்புலன்ஸ் வண்டிகள் தயாராக இருக்க வேண்டும் என வழியுறுத்தியும் ஆர்ப்பாட்டகாரர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

