முள்ளந்தண்டு வலி இலவச சிகிச்சை முகாம்



முள்ளந்தண்டு வலி உள்ளவர்களுக்கான 'டோண் முறை' தரப்பிச் சிகிச்சை, மற்றும் பார்வை குறைப்பாடு உள்ளவர்களுக்கான மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் இலவச சிகிச்சை முகாம் கிழக்கு மாகாண விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த சிகிச்சை முகாம் பெப்ரவரி 5 ஆம் திகதி மட்டக்களப்பு அரசடி மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெறவுள்ளது.
ஜேர்மனியைச் சேர்ந்த வைத்திய நிபுணர் ரெயின்கில்ட் இசன்ஸ்ஸி மற்றும் அவரது பயிற்றப்பட்ட 20 பேர் கொண்ட குழுவினர் இந்த சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு சிகிச்சையளிக்கவுள்ளனர்.
இதேவேளை 30 ஆண்களுக்கும் மற்றும் 30 பெண்களுக்குமாக 60 பேருக்கு மட்டுமே அன்றைய தினம் சிகிச்சையளிக்கப்படவுள்ளதால் முற்பதிவு செய்பவர்களின் அடிப்படையில் சிகிச்சைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்.
அத்தோடு கண்பார்வை குறைந்தவர்கள் பரிசோதிக்கப்பட்டு இலவச மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்படவுள்ளன.
முற்பதிவுகளுக்கு கிழக்கிலங்கை விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளன அலுவலகம் இல: 66/6, பன்சல வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியில் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
அல்லது பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மெற்கொண்டு முற்பதிவு செய்துக்கொள்ளலாம் தொ. பே 0652224345, மொபைல் :0777271345.
ஜேர்மனியைச் சேர்ந்த வைத்திய நிபுணர் ரெயின்கில்ட் இசன்ஸ்ஸி மற்றும் அவரது குழுவினர் 2010 முதல் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இலவசமாக 1500 பேருக்கு மேல் இச்சிகிச்சையை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.