நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு ரி.56 ரக துப்பாக்கியால் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக மங்களகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் ஜயக்கொடி என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த கான்ஸ்டபிள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை மங்களகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

