விவியன் றிச்சர்ற் சாதனையை சமப்பபடுத்திய பாகிஸ்தான் வீரர்



அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.
 பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது.
அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்களைப் பெற்றது.
பாகிஸ்தான் அணியின் 22 வயதான இளம் வீரர் பாபர் அஸாம் 100 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 84 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர் இந்த போட்டிக்கு முன் 20 போட்டியில் 3 சதம், 5 பவுண்டரியுடன் 953 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
இன்றைய போட்டியில் 47 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் விரைவாக 1000 ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் 1980 இல் 22 போட்டியில் 21 இன்னிங்ஸ் மூலம் 1000 ஓட்டங்களைக் கடந்திருந்தார். அதன்பின் கெவின் பீட்டர்சன் 2006 இல் 21 இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களைக் கடந்திருந்தார்.
பின்னர் மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜோநாதன் ட்ராட் 2011 ஆம் ஆண்டும், தென்னாபிரிக்காவின் குயிண்டான் டி காக் 2014 ஆம் ஆண்டும் 21 இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களைக் கடந்திருந்தனர்.
தற்போது பாபர் அஸாம் 5 ஆவது வீரராக 1000 ஓட்டங்களை விரைவாக எடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 45 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.