-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
ஏறாவூர், தாமரைக்கேணி அல் அக்ஷா கிராமத்தில் தொழுகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிகக் கொட்டிலை புதன்கிழமை (18) புகுந்த கும்பல் ஒன்று சேதப்படுத்தி தீ வைத்துள்ளனர். மேலும், அங்குள்ள காணிகளைச் சுற்றி அடைக்கப்பட்டிருந்த வேலிகளையும் அக்கும்பல் சேதப்படுத்தியுள்ளதாக தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், 23 வயதுடைய இளைஞர் ஒருவர் இக்கும்பலைச் சேர்ந்தவர்களினால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். -

