கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகத்தின் முதலாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகளே உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து மாணவர்களையும் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி கே.இ கருணாகரன் தெரிவித்துள்ளார்.

