பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள மசூதியொன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிந்து மாகாணத்தின் ஷெவான் ஷெரிஃப் என்ற இடத்தில் சுஃபி பிரிவினரின் லால் ஷாபாஸ் மசூதியில் ஏராளமானோர் திரண்டிருந்த போது, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
முதலில் கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்குதல்களை நடத்தியதாகவும் பின்னர் தமது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 100 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள பிரதமர் நவாஸ் ஷெரிப், இதற்கு எதிராக மக்கள் ஒருங்கிணைய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

