அரிசி மோசடி தொடர்பில் 1977க்கு அறிவிக்கலாம்



அரிசி விற்பனையில் முறைக்கேடுகள் செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரிசியை மறைத்து வைத்தல் மற்றும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட மோசடிகள் குறித்து, இந்த இலக்கத்துக்கு தகவல் தெரிவிக்க முடியும். இதற்காக 1977 என்ற இலக்கத்தை வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இன்று அறிமுகப்படுத்தினார்.