அவுஸ்திரேலியாவுடனான சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.
மெல்பேர்னில் இன்று (17) நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணித்தலைவர் உப்புல் தரங்க நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றார்.
அதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்களைப் பெற்றது. லசித் மாலிங்க 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களைப் பெற்றது. அசேல குணரட்ன 37 பந்துகளில் 52 ஓட்டங்களைக் குவித்தார். தில்ஷான் முனவீர 29 பந்துகளில் 44 ஓட்டங்களைக் குவித்தார்.
37 பந்துகளில் 52 ஓட்டங்களைக் குவித்த அசேல குணரட்ன போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை வென்றார்.
தொடரின் இரண்டாவது போட்டி நாளை மறுதினம் (19) ஞாயிற்றுக்கிழமை கீலோங்க் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
