அக்கரைப்பற்று தேசிய கல்லுாரி இல்ல விளையாட்டு




Suhaib Umarlebbe

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் 2017 ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி இறுதி நாள் நிகழ்வுகள் 2017.02.17 ஆந் திகதி வெள்ளிக் கிழமை பி.ப. 3.00 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடை பெற்றது.


இறுதி நாள் நிகழ்வில் அணி நடை மற்றும் உடற் பயிற்சிக் கண்காட்சி, இல்லங்கள் அலங்கரிப்பு, வினோத உடை. , அஞ்சலோட்டம் மற்றும் பழைய மாணவர்களுக்கான கலப்பு அஞ்சலோட்ட நிகழ்வுகளும் இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் கூடுதலான புள்ளிகளைப் பெற்று சீறாஸ் இல்லம் வெற்றிவாகை சூடிக்கொண்டது.