222 பேருக்கு 22 ஆம் திகதி ஆசிரியர் நியமனம்



கடந்த வருடம் நடந்த பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளுக்­கான பரீட்­சையில் 40 புள்­ளி­க­ளுக்கு மேல் பெற்று சித்­தி­ய­டைந்து நேர்­முகப் பரீட்­சையில் தெரி­வான 222 பேருக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி ஆசி­ரியர் நிய­மனம் வழங்கி வைக்­கப்­ப­ட­வுள்­ளது.
இவர்­களில் தமிழ்­மொழி மூல ஆசி­ரி­யர்கள் 164 பேரும் சிங்­கள மொழி மூல ஆசி­ரி­யர்கள் 58 பேருக்கும் இந்த நிய­ம­னங்கள் வழங்கி வைக்­கப்­ப­ட­வுள்­ளன.
இவ்­வாறு செய்­து­வ­ரு­கின்ற இந்த நல்­லாட்­சியை குறை கூறி பிழை காண வேண்டாம் என கிழக்கு மாகாண சுகா­தார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீ­ரிடம் தெரி­வித்தார்.
கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள பட்­ட­தா­ரிகள் பல வரு­டங்­க­ளாக எதிர்­கொண்டு­ வரும் பிரச்­சி­னைகள் தொடர்­பாக கிழக்கு மாகாண சுகா­தார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீ­ருடன் சுகா­தார அமைச்சில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
கிழக்கு மாகாண பட்­ட­தா­ரிகள் ஒன்­றி­யத்தின் தலைவர் எம்.ஜெஸீர் இங்கு கருத்து தெரி­வித்த போது, கிழக்கு மாகா­ணத்தில் 2012 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2016 ஆண்டு வரை­யான காலப் பகு­தி­களில் பட்­டங்­களை பெற்று இது­வ­ரையும் வேலை­யில்­லாமல் 45,00 பட்­ட­தா­ரிகள் உள்­ளனர் என்றார்.
எங்­களின் பரா­ம­ரிப்­புக்குக் கீழ் தாய், தந்­தை­யர்கள் இருக்­க­வேண்­டி­ய­வர்­களின் நிலைமை மாறி நாங்கள் அவர்­களின் பரா­ம­ரிப்­புக்குக் கீழ் இன்று வரையும் இருப்­பதை எண்ணி நாங்கள் மன­வே­த­னை­ய­டை­கின்றோம் எனவும் கூறினார்.
இது­தொ­டர்பில் கிழக்கு மாகாண சுகா­தார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பதி­ல­ளிக்­கையில், இன்­றைய அரசு பத­வி­யேற்ற காலத்­தி­லி­ருந்து இன்­று­வ­ரைக்கும் பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நிய­ம­னங்­க­ளையும் அதி­பர்கள் நிய­ம­னங்­க­ளையும் வழங்கி வரு­கின்­றது. இவ்­வாறு வழங்கி வைக்­கப்­படும் நியமனங்கள் யாவும் அவரவர்களின் நிலைமைகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகின்றன.