அபராதத் தொகை அதிகரிப்பு?



வரவு-செலவுத் திட்ட யோசனைக்கு அமைய, வாகன போக்குவரத்தில் ஏற்படும் பிரதான தவறுகள் 7க்கான அபராதம் அதிகரிக்கப்படும் என கூறப்பட்டது. எனினும், அபராதத்தை அதிகரிப்பது தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையின் ஊடாக, 30க்கும் அதிக தவறுகளுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுயதொழிலாளர் முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சின் செயலாளர், போக்குவரத்து அமைச்சின் செயலாளர், நீதியமைச்சின் செயலாளர், மோட்டார் வாகன திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களப் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் உள்ளதாக சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.