(LANKA SRI)
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களாக சமூக விரோத செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன.
ஒரு கொடூரமான சம்பவம் இடம்பெற்று அதன் வடுக்கள் மறைவதற்கு முன்னரே அடுத்தடுத்த கொடூரமான செயற்பாடுகள் வடக்கில் அரங்கேறி கொண்டிருக்கின்றன.
கடந்த வாரம் ஊர்காவற்துறையில் ஏழு மாத கர்ப்பிணி பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் அதன் தாக்கமும் மக்கள் மனதில் இருந்து மறைவதற்கு முன்னர் நேற்று முன்தினம் மற்றுமொரு கொடூரமான சம்பவம் அரங்கேறியதனை செய்தியில் வெளியிட்டோம்.
