தேசியக் கொடியை ஏற்றுங்கள்!



69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தேசிய கொடியை ஏற்றுமாறு உள்விவகார அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது. 

வீடுகள், வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இவ்வாறு தேசியக் கொடி ஏற்றுமாறு அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இலங்கையின் சுதந்திர தின விழா இம்முறை பெப்ரவரி 4ம் திகதி காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, உள்விவகார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.