கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேரும் மார்ச் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் வருட மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் இன்று அதிகாலை இவர்கள் பேராதனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

