தையல் பயிற்சி நெறிக்கு சேர்த்துகொள்ளல்



மட்டக்களப்பு மாநகர சபையினால் வருடாந்தம் நடாத்திவரும் தையல் பயிற்சிநெறிக்கு பயிற்சியாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் என மாநகர ஆணையாளர் வெ.தவராஜா அவர்கள் தெரிவித்தார்.

கீழ்காணும் நிபந்தனைகளுக்கமைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவுத்தபால் மூலம் எதிர்வரும் 2017.02.20 ஆம் திகதிக்கு முன்னர் 'மாநகர ஆணையாளர், மாநகர சபை, மட்டக்களப்பு' என முகவரியிட்டு அனுப்பிவைத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் அடங்கிய கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் 'தையல் பயிற்சி வகுப்பிற்கான ஆட்சேர்ப்பு' எனக் குறிப்பிடுதல் வேண்டும்.

தேர்வு

பயிற்சியாளர்கள் நேர்முகப்பரிட்சை மூலம் தெரிவுசெய்யப்படுவார்கள்.

தகைமைகள்

பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
க.பொ.த.(சா/த) படித்திருத்தல் வேண்டும்.
35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் நிரந்தர வதிவிடத்தைக் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

பயிற்சிக்குரிய நிபந்தனைகள்

பயிற்சிக்காலம் 06 மாதங்களைக் கொண்டதாக இருக்கும்.
அனுமதிக்கட்டணம் ரூ.100.00 மட்டும்
மாதாந்தக்க ட்டணம் ரூ.50.00 மட்டும்  
பயிற்சி முடிவில் நடாத்தப்படும் பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்
பயிற்சி வகுப்பு வாரத்தில் 05 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு வகுப்பும் 02        மணித்தியாலங்களைக் கொண்டிருக்கும்

விண்ணப்பிக்கும் முறை

கீழ் காட்டப்பட்ட மாதிரி விண்ணப்பத்திற்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும்.