போதைப் பொருள் கடத்தற்காரரான, குடு ரொஷான் என்று அழைக்கப்படும் சாமர சந்தருவன் என்பவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு, வனாத்தமுல்லை பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அடையாளம் தெரியாத இருவராலேயே இந்த வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

