ஈசி கேஸ் மூலம், 1.1 மில்லியன் ரூபாய் மேசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட மூவர், கல்கிஸைப் பகுதியில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். வெல்லம்பிட்டி, கொலன்னா, மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து குறித்த சந்தேகநபர்கள், கல்கிஸை விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், அலைபேசி நிறுவனம் ஒன்றின் மூலம் போட்டி நிகழ்ச்சியொன்றை நடத்தி இந்த பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

