மலேசியாவில் இலங்கையர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவரும் இந்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 வயதுடைய இலங்கையர் மற்றும் 30 வயதுடைய இந்தியர் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மலேசியாவில் உள்ள Jalan Sidam Kiri என்ற தோட்டத்தில் இலங்கையை சேர்ந்த நபரை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் தங்களின் 49 வயதுடைய இலங்கை நண்பர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ள நிலையில், கடந்த வியாழக்கிழமை சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் மீட்கப்பட்டதற்கு முதல் நாள் கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் நண்பர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றிருக்கலாம் என மலேசிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மலேசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடக செய்திகள் கூறுகின்றன.