பாண்டிருப்பு திருமதி விமலேஸ்வரிக்கு சேவை மேன்மை விருது



இந்து கலாசார அலுவல்கள் திணைக்களமும் இந்து கலாசார அலவல்கள் அமைச்சினாலும்  சிறந்த அறநெறிஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 2016 ஆண்டுக்கான இந்து சமய அறநெறிக்கல்வி தேசிய சேவை மேன்மை விருது  பாண்டிருப்பைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகரும் அறநெறிப்பாடசாலையின் அதிபருமான  திருமதி விமலேஸ்வரி கிருபைராசா அவர்கள் விருது  வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்து கலாசார அமைச்சினால் கடந்த 2017.02.10 திகதி பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் வைத்து இவ்விருது வழங்கிவைக்கப்பட்டது
அதேவேளை அவருடைய பாடசாலையான பாண்டிருப்பு கலைவானி அறநெறிப்பாடசாலைக்கும் இவ் உயர்விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
இவர் கல்முனை பாண்டிருப்புக் கிராமத்தினை வதிவிடமாகக் கொண்டவர் இவர் 1976 ஆண்டு ஆசிரியராக துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் முதல்நியமனம்பெற்று சேவையாற்றியதுடன்  அதன் பின்னர் கல்முனை கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றியுள்ளார்.
அதேவேளை 1993 ஆண்டில் இருந்து பாண்டிருப்பு கலைவாணி அறநெறிப பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றியதுடன் 1996 இல் இருந்து இன்றுவரைக்கும் அப்பாடசாலையில் அதிபராக இருந்து சமயப்பணியாற்றியமைக்காக இவ்விருது வழங்கிகௌரவிக்கப்பட்டுள்ளது இவர் ஆரம்பக்கல்வியினை பாண்டிருப்பு இந்து மகாவித்தியாலயத்தில் கற்றதுடன்  கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் உயர்தரத்தினையும் கற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.