பத்து வருடங்களின் பின்னர் அஸ்ஸிராஜ்ஜில் இல்ல விளையாட்டு




(எஸ்.எம்.அறுஸ்)


அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகாவித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்டப் போட்டி இன்று காலை இடம்பெற்றது.
அஸ்ஸிராஜ் மகாவித்தியாலய அதிபர் எஸ்.றிபாய்தீன் தலைமையில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியை அம்பாரை கச்சேரி தலைமை உள்ளகக் கணக்காய்வாளர் எம்.எம்.முஸ்தபாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மரதன் ஓட்டப்போட்டி அக்கரைப்பற்று நகரப் பள்ளிவாசல் முன்னால் ஆரம்பமாகி பிரதான வீதி ஊடாக வெள்ளப்பாதுகாப்பு வீதி, அம்பாரை வீதி, மணிக்கூட்டு சந்தி வளைவு, பொலிஸ் நிலை வீதி ஊடாக அஸ்ஸராஜ் மகாவித்தியாலய முன்றலை வந்தடைந்தது.

இதில் முதலாமிடத்தை அரபா இல்லத்தைச் சேர்ந்த ஏ.அப்துல்லா பெற்றுக் கொண்டார், இரண்டாமிடத்தை ஸம்ஸம் இல்லத்தைச் சேர்ந்த எம்.முகம்மட் ஹாதி பெற்றுக் கொண்டார்.மூன்றாமிடத்தை ஸம்ஸம் இல்லத்தைச் சேர்ந்த எஸ்.சப்னி அஹமட்பெற்றுக்கொண்டார்.

இம் மரதன் ஓட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மையான வீரா்கள் போட்யின் தூரத்தை நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மரன் ஓட்ட வீரர்களை அரபா, ஸம்ஸம், மினா ஆகிய மூன்று இல்லங்களையும் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.

பத்து வருட இடைவெளிக்குப் பிறகு இடம்பெறும் இல்ல விளையாட்டுப் போட்டியில் மாணவர்கள் மிகவும் விருப்பத்துடன் பங்கேற்று வருகின்றார்கள்.

இவ் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் மிகச்சிறப்பான முறையில் ஒழுங்கு செய்வதற்கு பாடசாலை சமூகம் தயாராகி வருவதாக போட்டிக்குழுவின் தலைவரும், பிரதி அதிபருமான எம்எச்.றகுமத்துல்லா தெரிவித்தார்.