மின்சார சபையின் தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை ஒன்றிணைந்த தொழிற்சங்க அமைப்பு, மின்சார ஊழியர் சங்கம் மற்றும் தேசிய ஊழியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், மின்சார சபை முன்றலில் இன்று முற்பகல் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

