பன்னீருக்கு சோதனைக்கு மேல் சோதனை. போதுமடா சாமி என்ற நிலை



சொத்துக் குவிப்பு வழக்கில் தன்னை குற்றவாளி என இந்திய உச்சநீதிமன்றம் அறிவித்ததையடுத்து, தனக்கு பதிலாக வேறொருவரை முதல்வராக தேர்வு செய்வதற்காக கூவத்தூர் கோல்டன் பே ரெசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை மேற்கொண்டார். 

ஆலோசனையின் முடிவில் அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். 

திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிய அதிமுக எம்எல்ஏக்களால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்வு செய்வதற்கு அனைத்தும் எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருகிறது என்றும், இதுகுறித்த கடிதத்தை நேரில் அளிப்பதற்காக ஆளுநரிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தனர். 

இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநர் நேரம் ஒதுக்கியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 12 பேர் ஆளுநரை சந்திக்கவுள்ளனர். 

முன்னதாக, முதலமைச்சராக உள்ள ஒ.பன்னீர்செல்வத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிமுக பொதுச் செயலளார் சசிகலா அறிவித்தார். 

அத்தோடு, பன்னீர் செல்வம் அணிக்கு தாவிய முக்கிய தலைவர்களான சி.பொன்னையன், பி.எச்.பாண்டியன், அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், முன்னால் அமைச்சர் முனுசாமி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட 21 பேர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கி சசிகலா உத்தரவிட்டுள்ளார். 

மேலும், மேற்கண்ட 21 பேருடன் தொடர்புடைய மற்றையவரும் நீக்கப்படுவார்கள் என கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.