விளையாட்டு நிகழ்வு



Suhaib Umarlebbe

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் செயலகம் மற்றும்  விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து 2017.02.06 ஆந் திகதி முதல் 2017.02.12 ஆந் திகதி வரையிலான காலப்பகுதியினை விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய   ஆரோக்கிய வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

அதற்கமைய அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் கடந்த ஒரு வாரமாக அரச ஊழியர்களுக்கான யோகாசனம் மற்றும் உடற்பயிற்றிசி, வர்த்தக சங்கங்களுக்கிடையிலான சிரமதானம் -  உடற்பயிற்சி, முன்பள்ளி சிறுவர்களுக்கான உடற்பயிற்சி, மகளிர்களுக்கான தொற்றா நோய் சம்பந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, வலது குறைந்தோருக்கான மருத்துவப் பரிசோதனையும் நடை பெற்றது.

கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி நிகழ்வுகள்  அக்கரைப்பற்று பிரதேச செயலாளரும் சட்டத்தரணியுமான  ஜனாப்.A.M.அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று மாநகர பொது விளையாட்டு மைதானத்தில்   இடம் பெற்றது.

2017.02.12. ஆந் திகதி ஞாயிற்றுக் கிழமை திணைக்கள ஊழியர்களுக்கிடையிலான 50 M ஆண்களுக்கான ஒட்டம், சாக்கு ஓட்டம், சமநிலை ஓட்டம், கிரிக்கெட் இறுதிப் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, ஆகியனவும் இடம் பெற்று அதில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலாளரினால்  பரிசில்களும் வழங்கப்பட்டது.

கயிறு இழுத்தல் போட்டி நிகழ்வில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய அணியினரும், கிரிக்கெட் ஆட்ட நிகழ்வில் பட்டியடிப்பிட்டி அர்-றஹீமிய்யா அணியினரும் வெற்றி வாகை சூடிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.