(க.கிஷாந்தன்)
ஆனவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அடக்கி ஆளும் இந்துக்களின் சிறப்புமிக்க விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரதம் மிக சிறப்பாக இந்துக்களால் அனுஷ்ட்டிக்கப்பட்டன.
மகா சிவராத்தியினை முன்னிட்டு சிவ ஆலயங்களில் 24.02.2017 அன்று பகல் முதல் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்தவகையில் அட்டன் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி ஆலயத்தில் மகா சிவராத்திரி விரதம் மிக சிறப்பாக அனுஷ்ட்டிக்கப்பட்டன.
இப்பூஜையில் விநாயகர் வழிபாடு, பாலாபிசேகம், தேன் அபிசேகம், பஞ்சாமிர்த அபிசேகம், சங்காபிசேகம், திரவிய அபிவிசேகம் உட்பட பல்வேறு அலங்கார அபிசேகங்கள் இடம்பெற்றதுடன் இரவு முழுவதும் நான்கு சாமப்பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றன.
அதனை தொடர்ந்து சிவராத்திரி விரதத்தின் சிறப்பு தொடர்பாக ஆலய பிரதம குரு கணபதி யோகி அவர்களின் சொற்பொழிவும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண விவசாயதுறை அமைச்சர் ரமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட சுமார் ஆயிரத்திற்கும் அண்மித்த பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
பூஜை வழிபாடுகள் ஆலய பிரதம குரு கணபதி யோகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றன

