மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டமாக மீரிகமவில் இருந்து குருநாகல் வரையான வீதி அமைக்கப்படுகின்றது.
அலவ்வ, கிரிஉல்ல வீதியின் குடகம்மன பிரதேசத்தில் இன்று நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைப்பதற்கான பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.
இன்று திரைநீக்கம் செய்யப்பட்ட இந்த இடத்தில் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்காக 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதி பிரதமர் தலைமையில் வைபவமொன்று நடைபெற்றதுடன், இதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
இரண்டு தடவைகள் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்திற்கு 138 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள இரண்டாம் கட்டத்தின் தூரம் 39.2 கிலோமீற்றர்களாகும்.

