B.h. Abdul Hameed
ஈழத்து மண்ணில், மிகச்சிறந்த ஓர் ‘ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனராக’ வரலாறு படைப்பார் என நான் எதிர்பார்த்த தம்பி ‘சஞ்சீவ்’ இன்று காலை, வாகன விபத்தில் தன் இன்னுயிரை நீத்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி, என்னைப் பெரும்சோகத்தில் ஆழ்த்திவிட்டது.
மூன்றுமாதங்களுக்கு முன், எண்ணற்ற கனவுகளுடன் என்னைச் சந்தித்த சஞ்சீவ் தன் ‘Drone Camera’ மூலம் ‘ஒரு பறவையின் பார்வையில்’ யாழ்மண்ணின் அழகைப் படம்பிடித்து அனுப்பிய திறமை பார்த்து வியந்துபோனேன்.
பிறப்பவர் எல்லோருமே, என்றோ ஓர் நாள் இறப்பது உறுதி. ஆனால்… 21 வயதில் இறப்பு…!
பெற்றோருக்கு மட்டுமல்ல அவரை நேசித்த அனைவருக்குமே இது ஓர்-பேரிழப்பு.
தம்பி சஞ்சீவ் அவர்களது ஆன்மா, நற்பேறு அடைய பிரார்த்திக்கின்றேன்.
அவரை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

