சரணடைந்தார் சசிகலா



சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி அஷ்வத் நாராயணா முன்னிலையில் மாலை 5.30 மணியளவில் சரணடைந்தார்.
சென்னையிலிருந்து சாலை மூலம் பயணித்த அவர், ஜெயலலிதா நினைவிடத்திலும், எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திலும் அஞ்சலி செலுத்திவிட்டுப் புறப்பட்டார்.
இந்த வழக்கில் தண்டனை பெற்ற இன்னொரு நபரான சசிகலாவின் உறவினர் இளவரசியும் உடன் வந்தடைந்தார்.

குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட இன்னொரு உறவினரான வி.என். சுதாகரன் இன்று சரணடையவில்லை. அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாளை சரணடைவார் என அவரது சார்பில் மனுத்காக்கல் செய்யப்பட்டுளளதாகக் கூறப்படுகிறது.