கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு



(க.கிஷாந்தன்)

இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடாக நுவரெலியா பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 19.02.2017  அன்று அட்டன் டைன் அன் ரெஸ்ட் விருந்தகத்தில் பொருளாளார் ஆர். சங்கரமணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை கிரிக்கெட் சபையின் நுவரெலியா மாவட்டத் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் அட்டன் டிக்கோயா நகர சபை முன்னாள் உறுப்பினர் ஹரிசன் சில்வா ஆகியோர் உபகரணங்களை வழங்கி வைப்பதையும், அமைச்சர் உரையாற்றுவதையும், அருகில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் இருப்பதையும், நிகழ்வில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.