பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சிரேஷ்ட மாணவர்கள் கைது



கண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை​யில், கனிஷ்ட மாணவர்கள் சில மீது, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சிரேஷ்ட மாணவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கேட்டல் பயிற்சியில் ஈடுப்பட்ட மாணவர்கள் மீதே இந்த பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ​பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்கான மாணவர்களின் பெற்றோர், பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து, சிரேஷ்ட மாணவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட  மாணவர்களை தெல்தெனி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.