(க.கிஷாந்தன்)
போலி ஆவணங்கள் தயாரித்து இரண்டு பசு மாடுகளை கொண்டு சென்ற இருவரை மஸ்கெலியா ரிகாடன் விசேட அதிரடி படையினர் கைது செய்து அட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அட்டன் பகுதியிலிருந்து கம்பளை வரை பழைய கொழும்பு வீதியூடாக 14.02.2017 அன்று மாலை கொண்டு சென்று கொண்டிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகலினை அடுத்து இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளபட்டுள்ளது.
இச்சுற்றி வளைப்பின் போது இறைச்சிக்காக கொண்டு சென்ற இரண்டு பசு மாடுகள் மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய லொறி ஆகியன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மிருக வைத்தியரின் சான்றிதழிலில் மாற்றம் செய்த குற்றத்திற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்கள் 15.02.2017 அன்று அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார தெரிவித்தனர்.

