(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் உள்ள களுதாவளைக் கிராமத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.கல்முனை - மட்டக்களப்பு நெடுஞ்சாலை வீதியில் களுதாவளை பிரதேச சபைக்கு அருகாமையில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்திலேயே மூவர் காயமடைந்துள்ளார்கள்.அம்பாறை மாவட்டத்தின் உகனை பிரதேசத்தை சேர்ந்த மூவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.இவர்கள் பொலநறுவையில் உறவினர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற மங்கல நிகழ்வில் கலந்துகொண்டு மீண்டும் அம்பாறையில் உள்ள தமது வீட்டுக்கு வந்து கொண்டிருக்கையிலே இவ்விபத்து
இடம்பெற்றுள்ளது.முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த சாரதி மதுபோதையிலும்இநித்திரையிலும் பயணித்த நிலையிலே விபத்து ஏற்பட்டுள்ளது.உள்ளே இருந்த பயணிகள் இருவரும் மதுபோதையில் காணப்பட்டார்கள். இடது பக்கம் பயணித்த முச்சக்கரவண்டியானது வலது பக்கத்தில் உள்ள கொங்கிறீட் தகர வேலியுடன் வேகமாக மோதியுள்ளது.இதனால் இரண்டு கொங்கிறீட் தூண்கள்இதகரம் உடைந்துள்ளது.தகரம் வெட்டியும் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.முச்சக்கரவண்டியின் முன்பக்க கண்ணாடி,இருக்கைகள் உடைந்து வீசப்பட்டுள்ளது.முச்சக்கர வண்டிக்கு பாரியசேதம் ஏற்பட்டுள்ளது.திசான்(வயது 19) மதுசாங்க(31)இபண்டார(38)ஆகியோர்களே விபத்தில் காயமடைந்துள்ளார்கள்.களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

